6 பந்துகளில் 6 சிக்ஸர்: ரோஸ் வைட்லே சாதனை

6 பந்துகளில் 6 சிக்ஸர்: ரோஸ் வைட்லே சாதனை

6 பந்துகளில் 6 சிக்ஸர்: ரோஸ் வைட்லே சாதனை
Published on

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட் டி20’ தொடர் போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணியை சேர்ந்த ரோஸ் வைட்லே ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட் டி20’ போட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வொர்செஸ்டர்ஷைர் அணியும் யார்க்க்ஷைர் அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய யார்க்க்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த டேவிட் வெல்லே 118 ரன்களை எடுத்தார். 234 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வொர்செஸ்டர்ஷைர் அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியை சேர்ந்த ரோஸ் வைட்லே என்பவர் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 16ஆவது ஓவரை வீச வந்த கார்வரின் பந்தை எல்லா பக்கமும் சிதறடித்தார். அவர் வீசய 6 பந்துகளிலும் 6 சிகஸர்களை அடித்து ரோஸ் வைட்லே சாதனை படைத்தார். 26 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அவரின் வெறித்தனமான ஆட்டம் அணிக்கு கைக்கொடுக்கவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com