\
வெற்றியை வசப்படுத்திய சிமோனா ஹாலெப்..

வெற்றியை வசப்படுத்திய சிமோனா ஹாலெப்..

வெற்றியை வசப்படுத்திய சிமோனா ஹாலெப்..
Published on

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஹாலெப், மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா உடன் பலப்பரீட்சை நடத்தினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். மேலும் இதற்கு முன்பு ஷரபோவா உடன் 7 போட்டிகளில் விளையாடிய ஹாலெப் தோல்வியை தழுவியிருந்தார். இந்நிலையில்  ஷரபோவாவிற்கு எதிரான ஆட்டத்தில் தற்போது முதல் முறையாக ஹாலெப் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com