\
“அவருக்கு நிகர் அவரே… யாருடனும் ஒப்பிட வேண்டாம்”- கில்லுக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்

“அவருக்கு நிகர் அவரே… யாருடனும் ஒப்பிட வேண்டாம்”- கில்லுக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்

“அவருக்கு நிகர் அவரே… யாருடனும் ஒப்பிட வேண்டாம்”- கில்லுக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் வீரராக களம் கண்டு அற்புதமாக விளையாடினார். அவரது ஆட்டம் அந்த வீரரை போல உள்ளது என ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 'அவருக்கு நிகர் அவரே. அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம்' என கில்லுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர். 

“கில் தனிச்சிறப்பு மிக்க வீரர் தான். அவரது ஆட்டத்தை அனுபவித்து விளையாட விடுங்கள். அவரை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். அவர் அடுத்த முன்னாள் வீரர் இல்லை. அவர் முதல் கில். அவ்வளவு தான். அதுமட்டும் தான். வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பினால் திறம்படைத்த வீரர்களை நாம் இழந்துள்ளோம்” என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். 

கில் பிருத்வி ஷாவுக்கு மாற்றாக களம் இறங்கி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com