பாண்ட்யா, ராகுலுக்குப் பதில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு

பாண்ட்யா, ராகுலுக்குப் பதில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு

பாண்ட்யா, ராகுலுக்குப் பதில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு
Published on

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய சங்கர், சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்தி சினிமா இயக்குனர் கரண் ஜோஹர் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும் கே.எல்.ராகுலும், பல பெண்களுடன் சுற்றியது பற்றியும், பெண்கள் பற்றி தவறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் இருவரையும் கண்டித்த இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, நடந்த சம்பவத்துக்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதை ஏற்காத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், விசாரணை முடியும் வரை ஹர்திக் பாண்ட்யா, ராகுல் இருவரும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் இந்தியா திரும்புகின் றனர்.

இவர்களுக்கு பதில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும் சுப்மான் கில்லும் அணியில் இணைகின்றனர். சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜய் சங்கர் ஏற்கனவே, இலங்கையில் நடந்த முத் தரப்பு தொடரில் பங்கேற்றிருந்தார்.

சுப்மான் கில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பாக விளையாடி, கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சித் தொடரில் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளார். இதையடுத்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடரை அடுத்து நியூசிலாந்தில் நடக்கும் தொடரில் சுப்மான் கில் பங்கேற்பார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி யது. அடுத்தப் போட்டி, அடிலெய்டில் வரும் 15 ஆம் தேதி நடக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com