சரிந்த அணியை மீட்ட ஷ்ரேயஸ் - பண்ட் இணை!

சரிந்த அணியை மீட்ட ஷ்ரேயஸ் - பண்ட் இணை!

சரிந்த அணியை மீட்ட ஷ்ரேயஸ் - பண்ட் இணை!
Published on

துபாயில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது .

ஷிகர் தவனும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.

இருவரும் பலமான பார்ட்னர்ஷிப்  அமைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் போல்ட் வீசிய முதல் பந்திலேயே அவுட்டானார் ஸ்டாய்னிஸ்.

தொடர்ந்து ரஹானே மற்றும் தவானும் விக்கெட்டை இழக்க 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.

பின்னர் ஜோடி சேர்ந்த டெல்லியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும், ரிஷப் பண்டும் அணியை சரிவிலிருந்து மீட்கும் டாஸ்க்கை கையிலெடுத்தனர். 

தொடக்கத்தில் இன்னிங்க்ஸை நிதானமாக தொடங்கிய இருவரும் கிரீஸில் செட்டானதும் மும்பை பவுலர்களின் பந்துவீச்சை அசால்டாக விளையாடினர்.

இருவரும் 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பண்ட் 38 பந்துகளில் 56 ரன்களை குவித்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். 

மறுபக்கம் ஷ்ரேயஸ் கூலாக விளையாடி வருகிறார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com