’நான் பார்த்ததிலேயே இவர்தான்...’ பாக்.கேப்டனை விளாசிய சோயிப் அக்தர்!
’நான் பார்த்ததிலேயே உடற்தகுதி இல்லாத ஒரே கேப்டன், சர்பிராஸ் அகமதுதான்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், இங்கி லாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின. ட்ரெண்ட் பிரிட்ஜில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ் தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், 21.4 ஓவரில், 105 ரன்னுக்கு சுருண்டது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட்டும் ஹோல்டர் 3, ரஸல் 2 விக்கெட்டையும் எடுத்தனர். பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.
இந்த போட்டிக்குப் பிறகு, ’பேச்சற்று இருக்கிறேன்’ என்று ட்வீட் செய்த அந்த நாட்டு அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சா ளர் சோயிப் அக்தர், பின்னர், ‘இந்த போட்டி முடிந்துவிட்டது. வீரர்களை குறை சொல்லாமல், நம் நாட்டுக்காக விளையாடும் இவர்களுக்குத்தான், உலகக் கோப்பை முழுவதும் ஆதரவளிக்க வேண்டும்’’ என்று மற்றொரு ட்வீட் செய்தார்.
இதற்கிடையே, டிவி விவாதத்தில் பங்கேற்ற அக்தர், ‘’சர்பிராஸ் அகமது, டாஸ் போட வரும்போது தொப்பையுடன் நின்றி ருந்தார். அவர் முகம் குண்டாக இருந்தது. நான் பார்த்தவரை, உடல் தகுதி இல்லாத முதல் கேப்டன் அவராகத்தான் இருப்பார். அவரால் அங்கும் இங்கும் நகர கூட முடியாது. விக்கெட் கீப்பிங் பணியிலும் அவர் தடுமாறி வருகிறார்’’ என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.