"கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணி வேற லெவல்" அக்தர் கருத்து !

"கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணி வேற லெவல்" அக்தர் கருத்து !

"கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணி வேற லெவல்" அக்தர் கருத்து !
Published on

கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணி மாறுபட்ட அணியாக தோன்றியது என வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்

ஹலோ செயலியின் நேரலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அதில், ''எனக்கு 6 வயது இருக்கும்போது நான் நடக்கவே மிகவும் சிரமப்பட்டேன். 1998 மற்றும் 1999 எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அந்த
காலக்கட்டத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தினேன்.

2005ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கேப்டனால் என் மீது பாலியல்
குற்றச்சாட்டு சூட்டப்பட்டது. இதனால், என் உடல்தகுதி சரியில்லை எனக்கூறி அடுத்த போட்டியில் விளையாட என்னை அனுமதிக்கவில்லை.
மேலும், அணியினர் அனைவரும் என்ன தாக்க முயற்சித்தனர். இதற்கு முன் இதனை நான் ஊடகத்தில் தெரிவித்ததில்லை. இப்பொழுதுதான்
இதனை முதல்முறையாக தெரிவிக்கிறேன்.

என்னை பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த கேப்டன் கங்குலி தான். தோனியும் சிறந்த கேப்டன் தான். எங்களை இந்தியா வீழ்த்தும் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. குறிப்பாக 1999 இல் நாங்கள் நிறைய போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறோம். ஆனால், 2004ல் கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணி மாறுபட்ட அணியாக தோன்றியது. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். கங்குலி மிகவும் புத்திசாலி
எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நான் சல்மான்கானை சந்தித்து பல விஷயங்கள் பேசினேன். நானும், அவரும் பீனிக்ஸ் பறவையை போன்றவர்கள் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com