விளையாட்டு
ஷின்வாரி கலக்கல்: 5-வது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி
ஷின்வாரி கலக்கல்: 5-வது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி
இலங்கை அணியுடனான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 103 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில் 21-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும், ஃபக்கர் ஸமான் 48 ரன்களும் எடுத்தனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி ஐந்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றியது.