அதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்

அதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்
அதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான தரவரிசையில் ஷிகர் தவான் பல்வேறு இடங்கள் முன்னேறியுள்ளார். 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் அடித்து சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் அவர் 107 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் அவர் 11 இடங்கள் முன்னேறி 24வது இடத்தை பிடித்துள்ளார். 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இதுதான் அவரது உச்சம். இதற்கு முன்பாக 25 இடங்களுக்குள் அவர் இடம்பெற்றதில்லை. டெஸ்ட்டில் 618 புள்ளிகளுடன் 24வது இடத்தை பிடித்துள்ள ஷிகார் தவான், ஒருநாள் தொடரில் 769 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் 617 புள்ளிகளுடன் 17வது இடத்தில் உள்ளார்.

தவானை போல் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சதம் அடித்த முரளி விஜய் 10 இடங்கள் முன்னேறி 23வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் கேப்டன் விராட் கோலி 909 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஆப்கானுக்கு எதிரான பெங்களூர் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தில் உள்ளார். அஸ்வின் 5வது இடத்தில் தொடர்கிறார். இஷாந்த் சர்மா 25, உமேஷ் யாதவ் 26 ஆவது இடங்களில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com