வாயில் கிளிப் மாட்டிக்கொண்டு பேசும் போட்டி : தவான், ஸ்ரேயாஸ் கலகல

வாயில் கிளிப் மாட்டிக்கொண்டு பேசும் போட்டி : தவான், ஸ்ரேயாஸ் கலகல

வாயில் கிளிப் மாட்டிக்கொண்டு பேசும் போட்டி : தவான், ஸ்ரேயாஸ் கலகல
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் வாயில் கிளிப் போட்டுக்கொண்டு பேசிய நிகழ்வு நகைச்சுவையாக அமைந்தது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அமெரிக்காவில் நடந்து இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் டி20 தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் ஒரு நகைச்சுவையான வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் இருவரும் ஒரு போட்டியில் பங்கேற்கின்றனர். இருவரும் தங்கள் வாயில் அனைத்து பற்களும் தெரியும்படி, கிளிப் ஒன்றை மாட்டிக்கொண்டு பேசியுள்ளனர். முதலில் பேசிய ஸ்ரேயாஸ், தனது பெயர் ஸ்ரேயர் ஐயர் என்பதை சரியாக சொல்லிவிடுகிறார். ஆனால் ஷிகர் தவான் தனது பெயரை சொல்வதற்கு சற்று தடுமாறிப்போகிறார். இதனால் இருவரும் சிரிப்பலையில் மூழ்கிப்போனார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com