பிறந்த நாள் வாழ்த்து... ரசிகரை குளிர்வித்த வீரேந்திர ஷேவாக்

பிறந்த நாள் வாழ்த்து... ரசிகரை குளிர்வித்த வீரேந்திர ஷேவாக்

பிறந்த நாள் வாழ்த்து... ரசிகரை குளிர்வித்த வீரேந்திர ஷேவாக்
Published on

தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவருக்கு வீரேந்திர ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவாக் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படுவர். எந்த பிரச்னையென்றாலும் தனது கருத்தினை தைரியமாக தெரிவிப்பவர் என்பதால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் வீரேந்திர ஷேவாக்கின் தீவிர ரசிகரான ஷிப் நாராயன் விரு என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இதனையடுத்து "V Sehwag Fans Fort" என்கிற ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஷேவாக்கின் ட்விட்டர் பக்கத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அதில்" ஷிப் நாராயன்  உங்களின் வெறித்தனமான ரசிகர். அவருக்கு இன்று பிறந்நாள். அதனால் அவருக்கு உங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவியுங்கள்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்ற வீரேந்திர ஷேவாக் உடனடியாக ஷிப் நாராயனுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு பதில் போட்டுள்ள ஷிப் நாராயன்" நன்றி வீரேந்திர ஷேவாக் ஜி. என்னுடைய பிறந்த நாளை மிகவும் சிறப்பான ஒருநாளாக மாற்றி விட்டீர்கள். எனது நீண்ட நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. என்னுடைய சந்தோஷத்தை வார்த்தையால் வெளிப்படுத்த இயலவில்லை" என தெரிவித்திருக்கிறார். எவ்வளவு பெரிய பிரபலமானாலும் தன்னுடைய ரசிகனின் சிறிய கோரிக்கையை ஏற்ற வீரேந்திர ஷேவாக்கின் பெருமை பாராட்டக்குரியதது தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com