\
இளம் வயதில் 3 வித போட்டிகளில் விளையாடி ஷபாலி சாதனை

இளம் வயதில் 3 வித போட்டிகளில் விளையாடி ஷபாலி சாதனை

இளம் வயதில் 3 வித போட்டிகளில் விளையாடி ஷபாலி சாதனை
Published on

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் மிக இளம் வயதிலேயே விளையாடிய இந்தியர் என்ற பெருமையை, ஹரியானாவைச் சேர்ந்த ஷாபாலி வர்மா படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஷபாலி வர்மா முதன்முறையாக களம் இறங்கினார். அவர் ஏற்கெனவே டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், 17 வயது 150 நாட்களில் ஒரு நாள் போட்டியிலும் களம் இறங்கியுள்ளார்.

உலக அளவில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜிப் உர் ரஹ்மான், மிக குறைந்த வயதிலேயே அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com