வீரர்களின் ஆட்டத்திறன் - கோலி, ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐ விசாரணை? 

வீரர்களின் ஆட்டத்திறன் - கோலி, ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐ விசாரணை? 
வீரர்களின் ஆட்டத்திறன் - கோலி, ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐ விசாரணை? 

இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்திறன் குறித்து ஆய்வு செய்யப்படுமென பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் உலகக்கோப்பை தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் கூறினார். எனினும் ஆய்வுக்கூட்டம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை. 
இங்கிலாந்திலிருந்து விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தாயகம் திரும்பியவுடன் இந்தக்கூட்டம் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. 

ஆய்வுக்கூட்டத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர்களும் பங்கேற்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்த அம்பத்தி ராயுடு அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் எனவும் தெரிகிறது. 

இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com