\
புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய ஷரபோவா

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய ஷரபோவா

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய ஷரபோவா
Published on: 

ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் நாயகி மரியா ஷரபோவா புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

சீனாவில் நடைபெறும் சென்ஸென் ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றில் ரூமேனிய வீராங்கனை மிக்கெலா புசர்னெஸ்குவை ரஷ்யாவின் மரியா ஷரபோவா எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் எதிராளிக்கு வாய்ப்பு அளிக்காமல் 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார்.இதன்மூலம் இந்தப்போட்டியை  6-3, 6-0 என்ற நேர்செட்களில் அவர் எளிதில் வென்றார். இந்த ஆண்டில் முதல் போட்டியை ஷரபோவா வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.சர்வதேச தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் ரூமேனிய வீராங்ஙகளை சிமோனா ஹாலப்பும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com