விளையாட்டு
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:இரண்டாம் சுற்றுக்கு நடால் முன்னேற்றம்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:இரண்டாம் சுற்றுக்கு நடால் முன்னேற்றம்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. தொடரின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் அமெரிக்க வீரர் ஜேரட் டொனல்ட்சனை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் இத்தாலி வீரர் பேஃபியோ போன்னினி உடன் நடால் விளையாட உள்ளார்.