“ ரோகித் நல்ல பாடம் எடுத்துள்ளார்” -ஷேன் வார்ன்

“ ரோகித் நல்ல பாடம் எடுத்துள்ளார்” -ஷேன் வார்ன்
“ ரோகித் நல்ல பாடம் எடுத்துள்ளார்” -ஷேன் வார்ன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதற்கட்டமாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை படுதோல்வியடைய செய்தது. இரண்டாவது போட்டியில் இரண்டு நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் இரண்டாவது போட்டியில் ரன் குவிக்க முடியாததற்கு காரணம் ஆடுகளம்தான் என இந்தியாவை கடுமையாக ட்விட்டரில் விமர்சித்திருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். அதையடுத்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன். 

“முதல் போட்டியில் டாஸை வெல்வது அவசியமாக இருந்தது. ஏனென்றால் முதல் இரண்டு நாட்களுக்கு அந்த ஆடுகளத்தில் ஒன்றுமே இல்லை. மூன்றாம் நாளிலிருந்துதான் அதன் வேலையை காட்ட தொடங்கியது. ஆனால் இரண்டாவது போட்டியில் அப்படி இல்லை. முதல் பந்து வீசியதிலிருந்தே பந்து சுழல்கிறது. இங்கிலாந்து இந்தியாவை 220 ரன்களுக்குள் சுருக்கி இருக்க வேண்டும். ஸ்பின்னுக்கும், ஸ்விங்கிற்கும் அப்படி ஒன்றும் வித்யாசமில்லை. மேலும் எப்படி விளையாட வேண்டுமென அபாரமான இன்னிங்ஸ் ஆடி ரோகித் பாடம் எடுத்துள்ளார்” என வார்ன் மைக்கேல் வாகனின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com