காலையில் இரங்கல் பதிவு... இரவில் மரணம் - பேசுபொருளான ஷேன் வார்னே பதிவு

காலையில் இரங்கல் பதிவு... இரவில் மரணம் - பேசுபொருளான ஷேன் வார்னே பதிவு

காலையில் இரங்கல் பதிவு... இரவில் மரணம் - பேசுபொருளான ஷேன் வார்னே பதிவு
Published on

கிரிக்கெட் வித்தகர் ஷேன் வார்னே காலமாகியுள்ள நிலையில் இறப்பதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன் அவர் இட்ட இரங்கல் பதிவு பேசுபொருளாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக வலம் வந்த ராட்னி மார்ஷ் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஷேன் வார்னே காலை 8 மணியளவில் இரங்கல் பதிவு ஒன்றை இட்டிருந்தார். ராட்னி மார்ஷ் ஆஸ்திரேலியாவின் இளம் வீரர்களுக்கு ஒரு வழிகாட்டி என வார்னே அதில் புகழ்ந்திருந்தார். இந்த உருக்கமான பதிவை இட்ட 12 மணி நேரங்களிலேயே வார்னேவும் இறந்தது கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com