'ஷேன் வார்னே மரணம் இயற்கைக்கு முரணானதல்ல..ஆனால்" - முதல் கட்ட அறிக்கை

'ஷேன் வார்னே மரணம் இயற்கைக்கு முரணானதல்ல..ஆனால்" - முதல் கட்ட அறிக்கை
'ஷேன் வார்னே மரணம் இயற்கைக்கு முரணானதல்ல..ஆனால்" - முதல் கட்ட அறிக்கை

ஷேன்வார்னே மரணம் இயற்கைக்கு முரணானதல்ல என்று முதல்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

52 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மற்றும் மூன்று நண்பர்கள் விடுமுறைக்காக தாய்லாந்து நாட்டின் கோ சாமுய் நகரில் உள்ள ஒரு தனியார் வில்லாவில் தங்கியிருந்ததாகவும், வார்னே இரவு உணவிற்கு வராததால், அவரின் நண்பர் ஒருவர் பார்க்க சென்றபோது ஷேன் வார்னே மாரடைப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக பேசிய போ புட் காவல்துறை அதிகாரி சாட்சாவின் நக்முசிக், "உடனடியாக அவரது நண்பர் அவருக்கு இதய புத்துயிர் முதலுதவி (சிபிஆர்) சிகிச்சை செய்து ஆம்புலன்ஸை அழைத்தார். அதன்பிறகு ஒரு அவசரகால மருத்துவ குழு வந்து 10-20 நிமிடங்களுக்கு மற்றொரு சிபிஆர் செய்தது.

பிறகு தாய் சர்வதேச மருத்துவமனையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவரை அங்கு அழைத்துச் சென்று அவருக்கு ஐந்து நிமிடங்கள் மீண்டும் சிபிஆர் செய்தார்கள், ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மரணத்திற்கான காரணம் அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அதை சந்தேகத்திற்குரியதாகக் கருதவில்லை, " என்று தெரிவித்தார்

இந்நிலையில் ஷேன் வார்னேவின் உடல் கோ சாமுய் தீவில் இருந்து தாய்லாந்து நாட்டின் பிரதான நிலப்பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. ஷேன் வார்னேவின் உடலை சோதனை செய்ததில் அவரது மரணம் இயற்கைக்கு முரணானது போல் தோன்றவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் மரணத்திற்கு உறுதியான காரணம் உடற் கூராய்வு அறிக்கையில்தான் தெரியவரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் வார்னேவின் உடலை விரைவாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்குமாறு அவரது குடும்பத்தினர் தாய்லாந்து அரசை கேட்டுக்கொண்டுள்ளனர். 3 மாத விடுமுறையை கழிக்க சுற்றுலா பகுதியான தாய்லாந்தின் கோ சாமுய் தீவுக்கு வார்னே வந்திருந்ததாகவும் ஆனால் திடீரென இறந்துவிட்டதாகவும் அவரது மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்துள்ளார்.

''அவரது உறவினர்கள் ஏற்கெனவே ஆஸ்திரேலிய தூதரகத்திடம் பேசிவிட்டனர். எனவே பிரதேச பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படும்'' என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com