\
ஷேன் வார்ன் வாகனம் ஓட்ட ஒரு வருடம் தடை!

ஷேன் வார்ன் வாகனம் ஓட்ட ஒரு வருடம் தடை!

ஷேன் வார்ன் வாகனம் ஓட்ட ஒரு வருடம் தடை!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் வாகனம் ஓட்ட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். இவர் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் கார் ஓட்டும்போது, குறிப்பிட்ட அளவு வேகத்தை விட அதிகமான வேகத்தில் ஓட்டியதால் போலீசில் சிக்கினார்.

இது தொடர்பான வழக்கு அங்குள்ள விம்பிள்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வார்ன் வேக கட்டுப்பாட்டு விதிமுறையை 6 முறை மீறியுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷேன் வார்ன், 12 மாதம் அதாவது ஒரு வருடத்துக்கு வாகனம் ஓட்ட தடை விதித்தது. அத்துடன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com