டெஸ்ட் போட்டிக்கு வீரர்களை இப்படியா தேர்வு செய்வது? மனோஜ் பிரபாகர் சாடல்

டெஸ்ட் போட்டிக்கு வீரர்களை இப்படியா தேர்வு செய்வது? மனோஜ் பிரபாகர் சாடல்
டெஸ்ட் போட்டிக்கு வீரர்களை இப்படியா தேர்வு செய்வது? மனோஜ் பிரபாகர் சாடல்

’டி20, ஒரு நாள் போட்டிகளின் ஃபார்மை வைத்துக்கொண்டு ஆட்களைத் தேர்வு செய்வது அவமானமான செயல்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் மனோஜ் பிரபாகர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புது பந்தை எதிர்கொண்டு ஆடுவதே சிறப்பான ஒன்று. அதற்கு  டி20, ஒரு நாள் போட்டிகளின் ஃபார்மை வைத்துக்கொண்டு ஆட்களைத் தேர்வு செய்வது அவமானமான செயல். ரிஷப் பண்ட் இங்கே சிறப்பாக விளையாடுகிறார். சமீபத்தில் 35 பந்தில் சதமடித்திருக்கிறார். அதற்காக அவரை டெஸ்ட் போட்டிக்கு சேர்ப்பிர்களா? ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு வீரர் இருநூறு ரன்கள் குவித்துவிட்டால், அவருக்கு அணியில் இடம் நிரந்தரமாகி விடுகிறது. வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் ரஹானே போன்ற வீரர்களை சேர்க்காமல் இருக்கின்றனர். அவரை ஆடும் லெவனில் சேர்த்திருக்க வேண்டும். அதே போல வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரையும் சேர்க்க வேண்டும். அவர் வீசும் ஸ்விங் பந்து கண்டிப்பாக பலன் கொடுக்கும். ஸ்விங்கிற்கு தென்னாப்பிரிக்க வீரர்கள் கண்டிப்பாக திணறுவார்கள். புவனேஷ்வர்குமார் புதிய பந்தை வீசும்போது முதல் 20 ஓவர்களில் கண்டிப்பாக விக்கெட் வீழ்த்துவார். மற்றவர்களை விட அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். நானாக இருந்தால், அவருக்காக மற்ற வீரர்கள் யாரை வேண்டுமானலும் ஆடும் லெவனில் இருந்து நீக்குவேன். 

ஐபிஎல் போட்டிகளின் மூலம் எல்லா பந்துகளையும் அடித்து ஆடுவது பேட்ஸ்மேன்களுக்கு வழக்கமாகிவிட்டது. ஷார்ட் பிட்ச் பந்துகளை தேவையில்லாமல் ஏன் அடிக்க வேண்டும்? விராத் கோலி அவுட் ஆனதுமே, இந்திய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் தொடங்கி விடுகிறது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பானதுதான். ஆனால், முதல் 20 ஓவரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலையாக நின்று ஆட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com