\
உலக சாம்பியன்ஷிப்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஷாக்‌ஷி மாலிக் பங்கேற்பு

உலக சாம்பியன்ஷிப்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஷாக்‌ஷி மாலிக் பங்கேற்பு

உலக சாம்பியன்ஷிப்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஷாக்‌ஷி மாலிக் பங்கேற்பு
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை தொடங்க உள்ள உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் ஷாக்‌ஷி மாலிக் பங்கேற்க உள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி பாரிஸில் நாளை தொடங்குகிறது. ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷாக்‌ஷி மலிக் உள்ளிட்ட 23 வீரர் - வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். ப்ரீஸ்டைல் போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.

கிரேக்கோ ரோமன் போட்டியில் இந்திய அணி, ஆடவர் பிரிவில் மட்டும் பங்கேற்கிறது. மகளிர் 58 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் ஷாக்‌ஷி மாலிக், 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் வினேஷ் போகத், ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் பஜ்ரங் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com