ஸ்டெயின், முரளீதரனுடன் இணைந்தார் சாகிப் அல் ஹசன்

ஸ்டெயின், முரளீதரனுடன் இணைந்தார் சாகிப் அல் ஹசன்

ஸ்டெயின், முரளீதரனுடன் இணைந்தார் சாகிப் அல் ஹசன்
Published on

பந்துவீச்சு ஜாம்பவான்கள் ஸ்டெயின், முரளீதரன் மற்றும் ரங்கனா ஹெராத் சாதனையுடன் இணைந்துள்ளார் பங்களாதேஷின் சாகிப் அல் ஹசன்.

பங்களாதேஷ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் 260 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 217 ரன்னில் சுருண்டது. சாகிப் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக, 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின், இலங்கையின் முத்தையா முரளீதரன், ரங்கனா ஹெராத் ஆகியோர் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தனர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com