ஸ்டம்புகளை பிடுங்கி வீசிய விவகாரம்: ஷாகிப் அல் ஹசன் 4 ஆட்டங்களில் விளையாட தடை

ஸ்டம்புகளை பிடுங்கி வீசிய விவகாரம்: ஷாகிப் அல் ஹசன் 4 ஆட்டங்களில் விளையாட தடை
ஸ்டம்புகளை பிடுங்கி வீசிய விவகாரம்: ஷாகிப் அல் ஹசன் 4 ஆட்டங்களில் விளையாட தடை
டாக்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் விதிமுறைகளை மீறி நடுவருடன் வாக்குவாதம் செய்ததுடன், ஸ்டம்புகளை காலால் உதைத்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஷாகிப் அல் ஹசனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
வங்காளதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில், முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிடெட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன் பந்து வீசியபோது நடுவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக ஆத்திரத்தில் மூன்று ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசினார். இதேபோல் மழையால் ஆட்டத்தை நிறுத்த நடுவர்கள் எடுத்த முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்த ஷாகிப், கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.
 
அவர் கோபத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின. ஷாகிப்பின் இந்த செயலை பலரும் கண்டித்தனர். பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஷாகிப். 'மூத்த வீரரான நான் அதுபோல நடந்து கொண்டிருக்கக் கூடாது. என் தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன்' என ஷாகிப் மன்னிப்பு கோரினார்.
 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் நிர்வாகம், டாக்கா பிரீமியர் லீக்கில் 4 ஆட்டங்களில் விளையாட ஷாகிப் அல் ஹசனுக்கு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்பு விதிகளை மீறியதற்காக 12 போட்டிகளில் விளையாட அல் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com