\
உலக தடகள சாம்பியன்ஷிப்: நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஷாய்லி சிங்

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஷாய்லி சிங்

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஷாய்லி சிங்
Published on: 

20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் ஷாய்லி சிங்.

கென்ய தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் 6.60 மீட்டர் தூரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஷாய்லி சிங் 6.59 மீட்டர் தூரம் குதித்து வெள்ளி வென்றார்.

1 சென்டி மீட்டர் தூரத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தார் ஷாய்லி சிங். உலக சீனியர் தடகளப் போட்டி நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற அஞ்சு பாபி ஜார்ஜின் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார் ஷாய்லி சிங். இப்போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com