இறங்கி அடித்த தோனி - ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்ட ஹோப்

இறங்கி அடித்த தோனி - ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்ட ஹோப்
இறங்கி அடித்த தோனி - ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்ட ஹோப்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் ஸ்டம்பிங் வாய்ப்பை சாய் ஹோப் நழுவவிட்டார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

பொறுப்பாக விளையாடி வந்த ராகுல் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை நழுவ விட்டார். அடுத்த வந்த விஜய் சங்கர் 14, கேதர் ஜாதவ் 7 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 140 ரன்னிற்குள் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்தது.

பின்னர், கேப்டன் விராட் கோலியுடன் தோனி இணைந்தார். அரைசதம் அடித்து விராட் விளையாடி வருகிறார். ஆட்டத்தின் 34 ஆவது ஓவரை ஆலென் வீசினார். முதல் பந்திலே இறங்கி அடிக்க முயன்றார் தோனி. ஆனால், பந்து அவரைத் தாண்டி கீப்பர் ஹோப் இடம் சென்று விட்டது. தோனி நீண்ட தூரம் முன்னால் சென்றுவிட்டார். இதுஒரு அழகான ஸ்டம்பிங் வாய்ப்பு. ஆனால், பந்தினை ஹோப் பிடிக்கவில்லை. ஆனால், கீழே விழுந்த பந்தினை எடுத்து அடித்திருந்தாலும் அவுட் ஆகியிருக்கும். ஆனால், ஹோப் சற்று தடுமாறிவிட்டார். பந்தை தட்டிவிட்டு ஸ்டம்பில் அடிக்க முற்பட்டார். ஆனாலும் பந்து படவில்லை.

தோனி அதற்குள் கிரீஸ்க்குள் வந்துவிட்டார். பந்து தூரம் செல்லவே தோனி ஒரு ரன் ஓடிவிட்டார். ஆனால், ஸ்டம்பிங் வாய்ப்பு கேட்கப்பட்டது. ஏனெனில் ஹோப் பந்தை ஒரு கையில் அடிக்க முற்பட்ட போது, மற்றொரு கையில் பெயில்ஸை தட்டிவிட்டார். இருப்பினும், ரிப்ளேயில் அது அவுட் இல்லை என்பது தெரிந்தது. தோனி மிகப்பெரிய ஸ்டம்பிங் வாய்ப்பில் இருந்த தப்பியுள்ளார். ஆப்கானுக்கு எதிரான போட்டியிலும் தோனி ரஷித் கான் பந்துவீச்சில் ஸ்டம்பிங்க் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 72 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 41 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. தோனி, ஹர்திக் பாண்ட்யா களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com