சாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை

சாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை
சாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்ட் இண்டீஸ் உலக சாதனை

ஒரு நாள் கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 365 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், அயர்லாந்து அணிகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடக்கிறது. டப்ளினில் நேற்று நடந்த முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. 

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான் கேம்பலும், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பும் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் எடுத்து பிரமிக்க வைத்தனர். 48 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், தொடக்க ஆட்டக்காரர்கள் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது. 

ஜான் கேம்ப்பெல் 137 பந்தில் 6 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 179 ரன்களும் ஷாய் ஹோப் 152 பந்தில் 2 சிக்சர், 22 பவுண்டரிகளுடன் 170 ரன்களும் எடுத்து மிரட்டினர். ஒரு நாள் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒரே இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறை. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 34.4 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com