”மனைவியும் மகள்களும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார்கள்” - அப்ரிடி

”மனைவியும் மகள்களும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார்கள்” - அப்ரிடி

”மனைவியும் மகள்களும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார்கள்” - அப்ரிடி

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஆன ஷாஹித் அப்ரிடி அவரது மனைவியும் இரண்டு மகள்களும் கொரோனாவை வென்று விட்டதாக அவர் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ எனது மனைவியும் இரண்டு மகள்களான அக்ஸா மற்றும் அன்சாவிற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை முடிவில் மனைவி மற்றும் மகள்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. உங்களது தொடர்ச்சியான ஆதரவுக்கு எனது நன்றி. உங்களை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும். தற்போது எனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க இருக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 13 ஆம் தேதி அப்ரிடிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com