பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி

பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி

பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை - ஷகித் அஃப்ரிதி
Published on

காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் தேவையில்லை, இந்தியாவுக்கும் தேவையில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அஃப்ரிதி கூறியுள்ளார்.

1947 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிட்டீஷ்  ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது முதலே இருநாடுகளிடையே பிரச்னையாக இருந்து காஷ்மீர் வருகிறது. காஷ்மீர் எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்தச் சண்டைகளில், இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் ராணுவ வீரர்களும் காஷ்மீர் பொதுமக்களும் என இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று இருநாட்டு தரப்பிலும் தெரிவித்து வருகின்றன. ஆனால், முறையான பேச்சுவார்த்தைகள் இதுவரை நடத்தி முடிக்கப்படவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், காஷ்மீரை இருநாட்டு தரப்பிலும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், “பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. பாகிஸ்தானால் தன்னுடைய நான்கு மாகாணங்களையே நிர்வகிக்க முடியவில்லை” என்றும் ஷகித் அஃப்ரிதி கூறியுள்ளார். லண்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “காஷ்மீரை இந்தியாவிடமும் கொடுக்காதீர்கள். காஷ்மீர் ஒரு தனி நாடாக இருக்கட்டும். அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் சாகக் கூடாது. மனிதநேயம் அங்கு நிலைத்திருக்க வேண்டும். மக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது” என்றார். 

இப்படி அஃப்ரிதி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதமும், காஷ்மீரில் அப்பாவி மக்கள் அரசு படைகளால் சுட்டுக் கொல்லப்படுவது கவலை அளிப்பதாகவும், ஐ.நா இதில் தலையிட வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.  

அதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டில், ‘காஷ்மீர் கிரிக்கெட் ரசிகர்கள் பலர்  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்’ என்றும் கூறியிருந்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com