நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் ஷபாலி வர்மா

நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் ஷபாலி வர்மா
நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் ஷபாலி வர்மா

இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா பெண்கள் கிரிக்கெட் பேட்டிங் தரநிலையில் முதலிடம் பெற்றுள்ளார்.

பெண்களுக்கான இருபது ஓவர் போட்டிகளில் பேட்டிங் தரநிலையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. இதில், 16 வயதான ஷபாலி வர்மா, 19 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக்கோப்பையில், 162 ரன்கள் குவித்ததன் மூலம் இப்பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, இரண்டு இடங்கள் சரிந்து ஆறாவது இடத்தை பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரநிலையில், தீப்தி சர்மா ஐந்தாவது இடத்தை தமதாக்கி இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் நான்கு இடங்கள் முன்னேறி 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு மிதாலி ராஜ் டி20 தரவரிசையில் இடம்பெற்றார். அதன்பிறகு ஷஃபாலிக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்க அணிகளும் நாளை மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா, இரண்டாம் இடம் பெற்ற ஆஸ்திரேலியாவும், குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்காவும், இங்கிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com