பிரசவம் முடிந்த மூன்றே மாதத்தில் விளையாட உள்ளார் செரினா வில்லியம்ஸ்

பிரசவம் முடிந்த மூன்றே மாதத்தில் விளையாட உள்ளார் செரினா வில்லியம்ஸ்

பிரசவம் முடிந்த மூன்றே மாதத்தில் விளையாட உள்ளார் செரினா வில்லியம்ஸ்
Published on

அடுத்த மாதம் மகப்பேறுக்கு தயாராகியுள்ள டென்னிஸ் நாயகி செரினா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கும் திட்டத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமது பிரசவத்திற்கு மருத்துவர்கள் அடுத்த மாதம் தேதி வழங்கியுள்ளதாகவும், அதன் பின்னர் மூன்று மாதங்கள் தாம் ஓய்வில் இருக்கப் போவதாகவும் கூறியுள்ளார். ஓய்விற்குப் பின்னர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்-ல் களமிறங்கி பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளப் போவதாக செரினா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செரினா வில்லியம்ஸ் கூறும்போது, இது ஒரு மூர்க்கத்தனமான திட்டம் என்று எனக்குத் தெரியும். ஆனால், இந்த கர்ப்பம் எனக்கு அதிக சக்தியை கொடுத்துள்ளது. அதனால் அந்த சக்தியுடனே பயணம் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்று கூறினார். 35 வயதான செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் உலகத் தரவரிசையில் தற்போது 15-வது இடத்தில் உள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com