ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மெல்பர்னில் நடைபெற்று வரும் போட்டியில், 2-வது சுற்றில் செர்பியாவின் நினாவை 6- 3, 6- 0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் பெலாரஸைச் சேர்ந்த அரினா சபேலெங்கா ரஷ்யாவின் டேரியாவை நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-3, 6-4, 6-1 என்ற நேர்செட்டில் செர்பியாவின் லாஸ்லோ ஜெரேவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 63-ம் நிலை வீரரான கனடாவின் வாசெக் போஸ்பிசிலை விரட்டியடித்து தொடர்ச்சியாக 15-வது வெற்றியை பதிவு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com