விளையாட்டு
அதிக வருமானம் ஈட்டிய வீராங்கனைகளில் செரினாவுக்கு முதலிடம்
அதிக வருமானம் ஈட்டிய வீராங்கனைகளில் செரினாவுக்கு முதலிடம்
நடப்பு ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய வீராங்கனைகள் தொடர்பாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
செரினா வில்லியம்ஸ் பல்வேறு போட்டிகளில் 23 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 35 வயதான செரினா, 2016 ஜூன் முதல் கடந்த ஜூன் வரையிலான காலகட்டத்தில், போட்டி மற்றும் இதர வருமானமாக சுமார் 200 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு டென்னிஸ் வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், 95 கோடி ரூபாய் வருமானத்துடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
முன்னதாக கறுப்பினப் பெண்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று செரினா வில்லியம்ஸ் ஒரு கட்டுரை எழுதியது குறிப்பிடத்தக்கது.

