“ஜோகோவிச்சை மயக்க எனக்கு அறுபதாயிரம் யூரோக்கள் தருவதாக ஒருவர் சொன்னார்” - மாடல் அழகி!

“ஜோகோவிச்சை மயக்க எனக்கு அறுபதாயிரம் யூரோக்கள் தருவதாக ஒருவர் சொன்னார்” - மாடல் அழகி!

“ஜோகோவிச்சை மயக்க எனக்கு அறுபதாயிரம் யூரோக்கள் தருவதாக ஒருவர் சொன்னார்” - மாடல் அழகி!
Published on

டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை மயக்கி, தனது வலையில் விழவைக்க தனக்கு ஒருவர் அறுபதாயிரம் யூரோக்கள் தர முன்வந்ததாக தெரிவித்துள்ளார் செர்பியாவை சேர்ந்த மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக். அதோடு அதனை படம் பிடித்து பகிரவும் அந்த நபர் தன்னை கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

“ஆம், நான் சொல்வது உண்மை தான். லண்டன் நகரை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அந்த நபருடனான சந்திப்பின்போது தனக்கு ஒரு நாளை ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டார். நான் தொழில் நிமித்தமாக தான் கேட்கிறார் என எண்ணினேன். அவருடன் தொடர்ந்து பேசியபோது தான் விவரம் புரிந்தது. 

செர்பியாவுக்கு புகழை சேர்த்து வரும் ஜோகோவிச்சிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் நான் அவரை மயக்க வேண்டுமென்றும், அதனை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைக்கப்பட்ட கேமராவில் பதிவு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார். அதனை செய்தால் அறுபதாயிரம் யூரோக்கள் தருவதாக சொன்னார். அதுமட்டுமல்லாது உலகத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் நான் இன்பச் சுற்றுலா போகலாம் எனவும் அவர் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு அவரை அடிக்க வேண்டுமென தோன்றியது. இருந்தாலும் நான் அதை செய்யவில்லை.

எனக்கு தெரிந்து அந்த நபருக்கு இந்த உலகத்தின் வேறு எந்தவொரு பெண்ணும் இதற்கு சம்மதம் சொல்லமாட்டார் என்றே தோன்றுகிறது. ஜோகோவிச் குடும்பஸ்தர். நல்ல மனிதர். ஆகச்சிறந்த விளையாட்டு வீரர்” என நடாலிஜா ஸ்கெசிக் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com