தென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய தமிழர் முத்துசாமி !

தென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய தமிழர் முத்துசாமி !
தென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய தமிழர் முத்துசாமி !

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனுரான் முத்துசாமி என்ற வீரர் விளையாடி வருகிறார்.

இந்தியாவைச் சேர்ந்தவர்களும், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் வேறு நாட்டு கிரிக்கெட் அணிகளில் விளையாடியுள்ளனர். முத்தையா முரளிதரன், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், தென் ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் ஆம்லா ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனுரான் முத்துசாமி என்ற வீரர் விளையாடி வருகிறார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியில் சீனுரான் முத்துசாமி இடம்பெற்றுள்ளார். இவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.

சீனுரான் முத்துசாமி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1994 ஆம் ஆண்டு பிறந்தார். இடதுகை வீரரான இவர், தென் ஆப்பிரிக்கா அணியின் முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரவுண்டராகவும் இவர் திகழ்கிறார். சீனுரான் முத்துசாமி, சர்வதேச போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com