``இந்த சைண்டிஸ்ட் அதை செய்துவிட்டார்”- மீம் போட்டு அஸ்வினை புகழ்ந்துதள்ளிய சேவாக்!

``இந்த சைண்டிஸ்ட் அதை செய்துவிட்டார்”- மீம் போட்டு அஸ்வினை புகழ்ந்துதள்ளிய சேவாக்!

``இந்த சைண்டிஸ்ட் அதை செய்துவிட்டார்”- மீம் போட்டு அஸ்வினை புகழ்ந்துதள்ளிய சேவாக்!
Published on

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து, வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்த அஸ்வினை புகழ்ந்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடியது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி வெற்றிபெற்ற நிலையில், கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபெற்று ஆடியது. 2 போட்டிகளையும் வென்று இந்திய அணி வங்கதேச அணியை ஒயிட்வாஸ் செய்துள்ளது.

வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு- 74 க்கு 7 விக்கெட் இழந்து இந்தியா தடுமாற்றம்!

2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் சேர்த்தது. 87 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி ஷகிர் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் உதவியால் 231 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில் வெற்றிபெற 145 ரன்கள் தேவை என்ற இடத்தில், இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சிறப்பான பந்துவீச்சால் ஆதிக்கம் செலுத்திய வங்கதேச பந்துவீச்சாளர்களான மெஹிதி ஹாசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் இருவரும் இந்திய பேட்டர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். 3ஆவது ஓவரிலேயே கேப்டன் ராகுல் விக்கெட்டை கைப்பற்றிய ஷாகிப் விக்கெட் கணக்கை தொடங்கி வைத்தார். பின்னர் தன் முழு திறமையையும் வெளிக்காட்டிய மெஹிதி ஹாசன் கில், புஜாரா, விராட் கோலி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்ற 37 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

காப்பாற்றிய அஸ்வின் & ஸ்ரேயாஸ் ஐயர்!

4ஆவது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு அடிக்கு மேல் அடி கொடுத்தனர் ஷாகிப் மற்றும் மெஹிதி இருவரும். உனாத்கட்டை ஷாகிப் வெளியேற்ற ரிஷப் பண்ட் மற்றும் சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேலை போல்டாக்கி வெளியேற்றினார் மெஹிதி. 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்க போராடினர் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஒரு அதிரடியாக ஆட, மற்றொருவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவென மாறி மாறி பார்ட்னர்ஷிப் போட சீராக ரன்களை சேர்த்தது இந்தியா. பின்னர் ஆட்டத்தை விரைவாகவே முடிக்க நினைத்த அஸ்வின் இறுதிகட்டத்தில் சிக்சர், பவுண்டரிகள் என அடிக்க 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த சைண்டிஸ்ட் அதை செய்து விட்டார்-சேவாக்!

இந்நிலையில் இந்தியாவை தோல்வி விளிம்பிலிருந்து வெற்றிக்கு அழைத்து சென்ற அஸ்வினையும், ஸ்ரேயாஸையும் பாராட்டி இருக்கும் சேவாக், அவருடைய டிவிட்டர் பக்கத்தில் “இந்த சைண்டிஸ்ட் எப்படியோ அதை செய்துவிட்டார்... ஆம், தங்களின் மிகச்சிறந்த கூட்டணியால் ஒருவழியாக இன்னிங்க்ஸை காப்பாற்றிவிட்டனர் அஷ்வினும் ஸ்ரேயாஸ் ஐயரும்” என்று பதிவிட்டுள்ளார்.

கும்ப்ளேவை போல் அஸ்வின் இந்தியாவிற்கு டெஸ்ட் போட்டிகளை பெற்றுத்தருகிறார்!

அஸ்வின் குறித்து பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், அஸ்வின் கும்ப்ளே இடத்திலிருந்து டெஸ்ட் போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com