\
சென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் ! விஸ்வநாதன் ஆனந்த் ட்வீட்

சென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் ! விஸ்வநாதன் ஆனந்த் ட்வீட்

சென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் ! விஸ்வநாதன் ஆனந்த் ட்வீட்
Published on

சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரகனாநந்தா. இவர் செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை
படைத்துள்ளார். 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பிரகனாநந்தா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் உக்ரைனின் செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன், 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியதே
சாதனையாக உள்ளது. 

இவருக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை பிரகனாநந்தா பெற்றுள்ளார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் க்ரெடின் ஓபன் ( gredine open ) என்ற சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றியை
ஈட்டியதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார். 

இது குறித்து கருத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் " கிராண்ட்மாஸ்டர் பட்டியில் இணைந்ததற்கு வரவேற்பும் பாராட்டும் பிரகனாநந்தா. விரைவில் நாம் சென்னையில் சந்திப்போம்" என பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com