’என் வெற்றிக்குப் பின்னால்...’- ரகசியம் உடைக்கிறார் புவனேஷ்வர் குமார்!
இந்திய கிரிக்கெட் அணியின் டாப் பந்துவீச்சாளர் ஆகியிருக்கிறார் புவனேஷ்வர்குமார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இவர், வீசிய ’ஸ்விங்’, இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இன்றைய போட்டியிலும் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பற்றி புவனேஷ்வர்குமார் கூறும்போது, ‘எனது வெற்றிக்குப் பின் பவுலிங் கோச், பரத் அருண் இருக்கிறார். அவர்தான் ’ஸ்விங்’கை மீண்டும் கொண்டுவரச் செய்தார். ‘ஸ்விங்’கை இழக்காமல் வேகமாகப் பந்து வீசுவதற்கு அவர்தான் காரணம். அணியின் பந்துவீச்சு மேம்படவும் அவர்தான் காரணம். எனது பந்துவீச்சில் இப்போது வேகம் இன்னும் அதிகரித்திருக்கிறது. அதோடு, பேட்டிங்கிலும் நான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் எனது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது’ என்றார்.