‘45 நிமிடத்தில் 8500 முறை ஸ்கிப்பிங்’ - காரைக்குடி பள்ளி மாணவன் சாதனை

‘45 நிமிடத்தில் 8500 முறை ஸ்கிப்பிங்’ - காரைக்குடி பள்ளி மாணவன் சாதனை
‘45 நிமிடத்தில் 8500 முறை ஸ்கிப்பிங்’ - காரைக்குடி பள்ளி மாணவன் சாதனை

காரைக்குடியில் 45 நிமிடத்தில் 8500 முறை ஸ்கிப்பிங் செய்து மெட்ரிக் பள்ளி மாணவன், சோழன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருபவர் கபிலேஷ்வரன். இவர் இன்று தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சி மேற்கொண்டார். 45 நிமிடங்களில் 8500 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கபிலேஷ்வரனுக்கு அந்நிறுவனத்தின் நிறுவனர் நிமலன் நீலமேகம் சான்றிதழை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் சுரேந்திரன், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் மாணவனின் சாதனையைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பட்டய விருது வழங்கி சிறப்பித்தனர். உலக சாதனை மாணவன் கபிலேஷ்வரனுக்கு, டாக்டர் சுரேந்திரன் ஊக்கத் தொகையாக 5001 ரூபாய் கொடுத்து பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com