\
Sawan Barwal Indias marathon man ends a 44-year wait at Asian Games
Sawan BarwalANI

Asian Games 2026 | 44 ஆண்டுகளுக்குப் பிறகு.. மராத்தானில் பதக்கத்தை வேட்டையாடிய இந்தியா!

ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சவான் பார்வால், இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவில் ஹவில்தாராகப் பணியாற்றி வருகிறார்.
Published on: 

2026 ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் மராத்தான் (42.195 கி.மீ) பிரிவில் இந்திய வீரர் சவான் பார்வால் (Sawan Barwal) வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு மராத்தானில் இந்தியாவுக்கு 44 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் நகோயா நகரில், கடந்த செப்டம்பர் 19-ஆம் தொடங்கிய 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு, விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில் இந்தியா பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்களை வேட்டையாடி வருகிறது. அந்த வகையில், ஆடவர் மராத்தான் (42.195 கி.மீ) பிரிவில் இந்திய வீரர் சவான் பார்வால் (Sawan Barwal) வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சவான் பார்வால், பந்தய தூரத்தை 2 மணி 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் (2:11:37) கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முன்னதாக ஏப்ரல் 2026-இல் நடைபெற்ற ரோட்டர்டாம் மராத்தானில் 2:11:58 ஓடியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இதன்மூலம் அவர் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்து புதிய இந்திய சாதனையைப் படைத்துள்ளார்.

Sawan Barwal
Sawan BarwalANI

இந்தச் சரித்திர சாதனை மூலம் ஆசிய விளையாட்டு மராத்தானில் இந்தியாவுக்கு 44 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. 1982-இல் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் எச்.கே.சீதாராம் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, மராத்தான் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே இந்தியாவிற்கு வெளியே (வெளிநாட்டு மண்ணில்) நடைபெறும் மராத்தான் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், 1951 (புதுடெல்லி) ஆசிய விளையாட்டில் சோட்டா சிங் (தங்கம்), சூரத் சிங் மாதூர் (வெண்கலம்) மற்றும் 1982-இல் எச்.கே.சீதாராம் (வெண்கலம்) ஆகியோருக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் மராத்தான் பதக்கம் வெல்லும் 4-ஆவது இந்தியர் சவான் பார்வால் ஆவார். ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சவான் பார்வால், இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவில் ஹவில்தாராகப் பணியாற்றி வருகிறார்.

Sawan Barwal Indias marathon man ends a 44-year wait at Asian Games
Asian Games 2026 | 9-வது தங்கம் வென்றது இந்திய ஆடவர் கபடி அணி.. ஈரானை வீழ்த்தி சாதனை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com