கோலடிக்க திணறிய ரொனால்டோ... வாய்ப்பை தவறவிட்டு மொத்தமாக வெளியேறிய அல்-நாசர் கிளப்!

கோலடிக்க திணறிய ரொனால்டோ... வாய்ப்பை தவறவிட்டு மொத்தமாக வெளியேறிய அல்-நாசர் கிளப்!
கோலடிக்க திணறிய ரொனால்டோ... வாய்ப்பை தவறவிட்டு மொத்தமாக வெளியேறிய அல்-நாசர் கிளப்!

சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி வெளியேறியது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் கால்பந்து கிளப் அணி, அல் இட்டிஹாட் அணியுடன் நேற்று (வியாழன்) ரியாத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து சவுதி சூப்பர் கோப்பையில் இருந்து அல் நாசர் அணி வெளியேறியது.

மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை விட்டு வெளியேறிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியா அல் நாசர் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் அல் இட்டிஹாட் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்க போராடினார். ஆனால், அல் இட்டிஹாட் அணி வீரர் ரொமரின்ஹோ கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்திய பின்னர், கோலை சமன் செய்வதற்கான பொன்னான வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.

இந்த போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அல் இட்டிஹாட் அணியில் தடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ரொனால்டோவால் கோலடிக்க முடியவில்லை. 67-வது நிமிடத்தில் ஆண்டர்சன் தலிஸ்கா கோல் அடித்து கோல் வித்தியாசத்தை குறைத்த போதும், அல் இட்டிஹாட் அப்டெர்ராசாக் ஹம்தல்லா கோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து அல் நாசர் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இதையடுத்து பிப்ரவரி 3 ஆம் தேதி சவுதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் கால்பந்து கிளப் அணி, அல் ஃபதே அணிக்கு எதிரான போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com