காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தட்டிவந்த தமிழக வீரர்

காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தட்டிவந்த தமிழக வீரர்
காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தட்டிவந்த தமிழக வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைப்பெற்று வருகிறது.இதில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சதிஷ் குமார் சிவலிங்கம் 77கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்தப்போட்டியில் இவர் தங்கம் வென்றார். இங்கிலாந்து வீரர் ஜேக் ஓலிவர் மற்றும் சதீஷ்குமார் இடையே தங்கப் பதக்கம் வெல்ல கடும் போட்டி நிலவியது. ஸ்நாச் பிரிவில் தமிழக வீரரை விட ஒரு கிலோ கூடுதலாக தூக்கி இங்கிலாந்து வீரர் முன்னிலை பெற்றார். பின்னர் நடந்த க்ளீன் அண்ட் ஜர்க் முறையில், சதீஷ்குமார் 173 கிலோ எடையை தூக்கினார். இங்கிலாந்து வீரரை விட 6 கிலோ அதிகம் தூக்கியதால் தமிழகத்தின் சதீஷ்குமாருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

25 வயதான சதீஷ்குமார் ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். அவரின் சாதனையைப் பார‌ட்டி 2015ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இளம் வீரரை ஊக்குவிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு 2016ஆம் ஆண்டில் நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கி கவுரவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com