பாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்!

பாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்!
பாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமது தொடர்ந்து நீடிக்கிறார்.

இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்று முடிவிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதையடுத்து அணியின் செயல்பாடுகள் குறித்து, அந்நாட்டு கிரிக்கெட் அணி மேலாளர் வாசிம் கானுடன் விவாதிக்கப்பட்டது. 

அப்போது பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மாற்றிவிட்டு, சுழல் பந்துவீச்சாளர் சதாப் கானை குறுகிய ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாகவும் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பாபர் அசாமை நியமிக்கலாம் என்றும் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மாற்றப்பட்டார்.

சர்பிராஸ் அகமதுவும் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான கேப்டனாக சர்பிராஸையே நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. துணை கேப்டனாக பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com