துப்பாக்கிச் சுடுதலில் அசத்தும் இந்திய அணி : வெள்ளி வென்றார் சஞ்சீவ்
ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் களைகட்டி வருகின்றன. ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. 3 நிலைகளில் இருந்து இலக்கை குறிவைக்கும் 50 மீட்டர் ரைபிள் த்ரீ பி பிரிவு துப்பாக்கிச் சுடுதலில், சஞ்சீவ் ராஜ்புத் இரண்டாவது இடம் பிடித்தார்.
8 வீரர்கள் பங்கேற்ற இறுதிச் சுற்றில், இறுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட ராஜ்புத் ஒரு கட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். பின்பு 452 புள்ளி 7 புள்ளிகளுடன் சஞ்சீவ் ராஜ்புத் இரண்டாவது இடம் பெற்று அசத்தினார். இதனால் அந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா எட்டாவது பதக்கம் வென்றுள்ளது. மேலும் இந்தியா இன்று மட்டும் மூன்று பதக்கம் வென்றுள்ளது. அவை அனைத்துமே துப்பாக்கிச் சுடுதலில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.