’ஷாட்டுகளை தேர்வு செய்த விதத்தில் ரஹானே தவறு செய்து விட்டார்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.
இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துணை கேப்டனான ரஹானே, 1 ரன்னில் வெளியேறினார். இந்த தொடரில் அவர் 4, 0, 2, 1 என்றே ரன்கள் எடுத்துள்ளார்.
இதுபற்றி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும்போது, ‘தனது ஆட்டத்தை மேம்படுத்த கடினமாக உழைக்கும் வீரர் ரஹானே. கடந்த டெஸ்டிலும், இந்த இன்னிங்சிலும் ஷாட்டுகளை தேர்வு செய்த விதத்தில் தவறு செய்து விட்டார். அதை நினைத்து அவர் வேதனையில் இருப்பார். ஆனால் அவர் சிறந்த வீரர் என்பதை மறந்து விடக்கூடாது. வெளிநாடுகளில் அவரது சாதனை வியக்கத்தக்கது. அவர் விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்’ என்றார்.