ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்..சானியா மிர்சா இணை தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்..சானியா மிர்சா இணை தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்..சானியா மிர்சா இணை தோல்வி
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-குரேஷியாவின் இவான் டோடிக் இணை தோல்வியை தழுவியது.

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ்-கொலம்பியாவின் செபாஸ்டியன் கேபல் இணையை எதிர்த்து சானியா மிர்சா-குரேஷியாவின் இவான் டோடிக் இணை விளையாடியது. இதில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் சானியா மிர்சா-குரேஷியாவின் இவான் டோடிக் இணை இழந்தது.

இதையடுத்து இரண்டாவது செட்டைக் கைப்பற்றப் போராடி 4-6 என்ற செட் கணக்கில் அதனையும் இழந்து சானியா மிர்சா-இவான் டோடிக் இணை தோல்வியை தழுவியது. இதனால் ஏழாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் கனவுடன் களம் இறங்கிய சானியா மிர்சாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com