நடக்கவே முடியாமல் சிரமப்படும் ஜெயசூர்யா: வைரலாகும் படம்

நடக்கவே முடியாமல் சிரமப்படும் ஜெயசூர்யா: வைரலாகும் படம்

நடக்கவே முடியாமல் சிரமப்படும் ஜெயசூர்யா: வைரலாகும் படம்
Published on

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சானத் ஜெயசூர்யா நடக்கவே முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் வீரர்களுள் இலங்கை வீரர் ஜெயசூர்யாவும் ஒருவர். இவர் தனது அதிரடியான பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு மூலம் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர். 

இலங்கை அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜெயசூர்யா 28 சதம், 68 அரைசதங்களுடன் 13,430 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 323, டெஸ்டில் 98 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை அவர் வகித்து வந்தார். இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவராகவும் ஜெயசூர்யா பதவி வகித்து வந்தார். 

இந்நிலையில், கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஜெயசூர்யா நடக்கவே முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால், ஊன்றுகோல் உதவியால் ஜெயசூர்யா நடந்து வருகிறார். ஊன்றுகோலுடன் அவர் நடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com