பிராவோவுக்கு பதில் மீண்டும் சாம் குர்ரான் : ராஜஸ்தானில் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மிஸ்ஸிங்..!

பிராவோவுக்கு பதில் மீண்டும் சாம் குர்ரான் : ராஜஸ்தானில் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மிஸ்ஸிங்..!

பிராவோவுக்கு பதில் மீண்டும் சாம் குர்ரான் : ராஜஸ்தானில் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மிஸ்ஸிங்..!
Published on

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணியை பொறுத்தவரை சாம் குர்ரான் மீண்டும் இடம்பிடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்கவுள்ளார். அந்த அணியில் முக்கிய பேட்ஸ்மேனாகவும், கீப்பராகவும் இருந்த ஜாஸ் பட்லர் இன்று பங்கேற்கமாட்டார் என தெரியவந்துள்ளது. அவர் கொரோனா தனிமைப்படுத்தலில் இருப்பதால் அவருக்கு பதில் டேவிட் மில்லர் இடம்பிடிப்பார் எனப்படுகிறது.

அத்துடன், ராஜஸ்தான் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸும் இன்றைய போட்டியில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் நியூஸிலாந்தில் உள்ள தனது தந்தையை அண்மையில் பார்த்துவிட்டு வந்ததால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் டாம் குர்ரான் அணியில் இடம்பிடிக்கவுள்ளாராம்.

சென்னை அணியை பொறுத்தவரையில் இன்றைய போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ விளையாடமாட்டார் என்றும், அவருக்கு பதில் சாம் குர்ரானே அணியில் தொடர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடது பேட்டிங் செய்யும் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாததால், இடது பேட்டிங் செய்யும் குரானை அணியில் தொடர முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

இதற்கிடையே, சென்னையில் அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த ருதுராஜ் கேய்க்வாத் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து திரும்பியிருக்கிறார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதால் மீண்டும் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அவர் அணியில் இடம்பிடிப்பது கேள்விக்குறிதானாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com