இந்திய அணி தோற்க அவர்தான் காரணம்: ரவி சாஸ்திரி

இந்திய அணி தோற்க அவர்தான் காரணம்: ரவி சாஸ்திரி

இந்திய அணி தோற்க அவர்தான் காரணம்: ரவி சாஸ்திரி
Published on

இங்கிலாந்து தொடரில் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் காயப்படுத்திவிட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால், முந்தைய அணிகளை விட, தற்போ தைய இந்திய அணி, சிறப்பாக செயல்பட்டு வருவதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணி வென்றதை விட, சாம் கர்ரன் தனியாளாக இந்திய அணியை காயப்படுத்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நாங்கள் மோசமாக தோற்றோம் என்று சொல்லமாட்டேன்.  கடுமையாக முயற்சி செய்தோம். இங்கிலாந்து அணியின் தொடர் நாயகன் யார் என்று நானும் விராத்தும் தேர்ந்தெடுத்தது சாம் கர்ரனைதான். அவர் விளையாடிய விதம், சேர்த்த ரன்கள் எங்களிடம் இருந்து போட்டியை பறித்துவிட்டது. இங்கிலாந்து அணியை விட அவர்தான் காயப்படுத்தினார்.

 முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களில் தவித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து அணியை, சாம் கர்ரன் காப்பாற்றினார். நான்காவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து தடுமாறியபோதும் அவர்தான் அணியை மீட்டார். சில விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர்தான் இந்திய அணி தோற்க காரணமாக இருந்தார்’ என்றார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com