ஐபிஎல் தொடரில் அறிமுகமான சேலம் வீரர்

ஐபிஎல் தொடரில் அறிமுகமான சேலம் வீரர்

ஐபிஎல் தொடரில் அறிமுகமான சேலம் வீரர்
Published on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் சேலத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் பஞ்சாப் அணியில் அறிமுக வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

ஆட்டத்தின் ஏழாவது ஓவரை வீசும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. தாம் வீசிய முதல் ஓவரிலேயே அவர் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் வீசிய இரண்டாவது பந்தில், அனுபவ வீரர் அஜிங்க்ய ரஹானே ஆட்டமிழந்தார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்பது நினைவு கூரத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com