விளையாட்டு
ஹாங்காங் ஓபன்: 2வது சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
ஹாங்காங் ஓபன்: 2வது சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் டென்மார்க் வீராங்கனையை எதிர்க்கொண்டார். இந்தபோட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சாய்னாவுக்கு டென்மார்க் வீராங்கனை கடுமையான நெருக்கடி கொடுத்தார். இந்த செட்டை 23-21 என்ற கணக்கில் கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு சாய்னா முன்னேறினார்.